காதலின் மீதியோ நீ-16
காதலின் மீதியோ நீ-16
அங்கு இருந்த கல்யாண வேலைகளில் யாரும் ஆயுஷைக் கவனிக்கவில்லை
அவன் வந்தது, உட்கார்ந்தது,மணமேடைக்கு ஏறியது என்று யாருமே அவனை பார்க்கவில்லை .
மாப்பிள்ளை கையில் தாலிக்கொடுத்ததும், அதை அவன் கட்டப் போகும்போதுதான் ஆயுஷ் வேகமாக வந்து மாப்பிள்ளைக் கையில் இருந்தத் தாலியைப்பிடுங்கிவிட்டு,அவனைததள்ளி விட்டுவிட்டு நித்ராவின் கழுத்தில் தானே வேகமாகத் தாலியைகட்டி இருந்தான்.
நித்ரா வேற யாரோ தனது கழுத்தில் தாலி கட்டப் போறானே என்று இதயம் வெடித்து விடாது இருக்க தனது கண்ணீர் அடக்கி கொண்டு உட்கார்ந்திருந்தாள்
அதற்குள் ஆயுஷ் தாலியைப்பிடுங்கியதும் ஐயோ பொண்ணுக் கழுத்தில் வேற யாரோ தாலியைக் கட்ட போறாங்க என்று ஒரு நிமிடம் அதிர்ந்து மண்டபத்தில் உள்ளவர்கள் அமைதியாகி விடவும் ஆயுஷ் தாலியைகட்டி இருந்தான்.
மோகன் உட்பட மித்ரா வரைக்கும் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.
ஏற்கனவே ருக்மணிக்கும் தனத்துக்கும் அடையாளம் தெரியும். ஆயுஷ் என்று தெரியாவிட்டாலும் மாலில் சண்டை போட்டவன் என்று அடையாளம் தெரியும் என்பதால் வேகமாக வந்த ருக்குமணி ஆயுஷைப் பிடித்து தள்ளினார்.இப்படியாக ஒரு பெரிய பிரளயம் அங்கு உருவாகி இருந்தது.
மோகனும் மித்ராவும் ஓடிவந்து “சார் என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க. இப்படியா வந்து ஒருத்தியோட வாழ்க்கையைக் கெடுப்பீங்க?” என்று வருந்தி சத்தம் போட்டனர்.
ஆயுஷ் நிதானமாக நித்ராவின் கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தியவன்”உண்மையைச் சொல்லு நான் உன் வாழ்க்கையைக் கெடுக்கிறதுக்காகவா வந்து தாலிக்கட்டினேன்?”என்று கேட்டான்.
அவனது நிதானமான அந்தக் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.தன் தலையைக் குனிந்துக்கொண்டாள்.
நித்ரா தலையைக் குனிந்ததும் அவளது நாடியைப் பிடித்து தலையை நிமிர்த்தியவன் “உண்மையை சொல்லு உன் வாழ்க்கை கெடுக்குறதுக்கு வந்தேனா? இல்லை என் வாழ்க்கைக்காக உன்கிட்ட வந்திருக்கேனா? அது எப்படி உண்மையாக காதலிச்ச ஒருத்தனைவிட்டுட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு எப்படி வந்து மணமேடையில் வந்து உட்கார்ந்த? சொல்லு நித்து நான் வேண்டாம்னுதான் வந்தியா?”என்று அடக்கப்பட்டக் கோபத்தில் கேள்விக்கேட்டு அவளிடமிருந்து வரும் பதிலுக்காகக் காத்திருந்தான்.
ஆயுஷும் நித்ராவும் காதலித்தார்கள் என்று சொன்னதுமே மித்ரா நெஞ்சில் கை வைத்து “ஐயோ!” என்று சத்தமாக சொன்னாள்.
மோகன் இது சரியில்லையே இவங்க இரண்டுபேரும் காதலிச்சாங்களா? எங்கேயோ தப்பு நடந்திருக்கு என்று மோகன் பதறி நின்றான்.
நித்ராவும் ஆயுஷும் காதலித்தார்கள் என்று தெரியாமல் இப்படிக் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டோமே.ஒருவேளை இப்போ பார்த்த மாப்பிள்ளை நித்ராவின் கழுத்தில் தாலி கட்டியிருந்தால் அவளது வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்றும் நினைத்து பதறினர்.
அதற்குள் அங்கே விழுந்துக்கிடந்த மாப்பிள்ளைப் பையனை அவனது பெற்றோர்கள் அண்ணன் தம்பியும் சேர்ந்து தூக்கி விட்டனர்.
அவர்கள் கோபத்தோடு இப்பொழுது மோகனிடம் வந்து “என்ன சார் நீங்க அன்னைக்கு பழம் மாதிரி பேசினீங்க பொண்ணுக்கு வேண்டி பேசுனீங்க.நல்ல பொண்ணு அந்த பொண்ணு இந்த பொண்ணுன்னு. இப்போ பாருங்க இன்னொருத்தனை காதலித்திருக்கிறாள்.
அதுவும் வடக்கனை அவனைக் காதலிச்சிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி இங்க வந்து என்மகன் கையாலத் தாலி வாங்க வந்து உட்கார்ந்து இருக்காள்.
நல்லவேளை இப்படிப்பட்டப் பொண்ணுக் கழுத்துல என் மகன் தாலிக்கட்டாமல் தப்பிச்சிட்டான்.நல்ல வளர்த்திருக்காங்க பொம்பள பிள்ளைங்களை. ச்சை கேவலமான குடும்பம் போல. இப்படித்தான் ஊர்மேஞ்சிட்டு அலைஞ்சிருந்துக்கும்போல.அதான் அப்பன்காரன் முதப்பொண்ணுக் கழுத்துலத் தாலி ஏறும்போதே செத்துட்டான்” என்று கேவலமாகப் பேசத்தொடங்கினார்கள்.
அதைக் கேட்டதும் மோகன் அவர்களது சட்டையை பிடித்த சண்டை போட ஆரம்பித்தான் “எப்படி நீங்க எங்க வீட்டுப் பொண்ண பத்தி எங்க குடும்பத்து பொண்ணைப் பத்தி தப்பாபேசலாம்.இதுக்கு அப்புறம் எதுவும் பேசக்கூடாது எங்க குடும்ப பிரச்சினைகளை நாங்கள் பேசி தீர்த்துக்கிறோம் எங்க பொண்ணு ஏதோ தப்பு செய்துட்டாள்.அதை நாங்களே சரிப்பண்ணிக்கிறோம். உங்களுக்கு என்ன செய்யணுமோ அதை நாங்க அப்புறமா செய்து கொள்கிறோம் முதலில் இங்க இருந்து கிளம்பி போங்க” என்று அவர்களை விரட்டி விட்டுவிட்டான்.
அருணும் சுமியும் வந்து நித்ராவிடம்” நீதான் இங்கே நிக்கிறாரே உனக்கு தாலி கட்டினாரே இந்த ஆளைக் காதலிச்சியா? உண்மையா? இல்லையா?” சொல்லு என்று சத்தமாக கேட்டான்.
அவளோ ஆமா இல்லை என்று எந்த பதிலும் சொல்லாத அப்படியே அமைதியாக தலை கவிழ்ந்து கொண்டாள்.
ஆனால் பதில் சொல்லாது ஏங்கி ஏங்கி அழுதுக் கொண்டிருந்தாள். அவளது முகமெல்லாம் சிவந்து போய்விட்டது. அவளுக்கோ இப்போது அழமட்டும்தான் தெரிந்தது எந்த வார்த்தையும் வாயிலிருந்து வரவில்லை.
ஆயுஷ் அவளதுக் கையைப் பிடித்திழுத்து தன்பக்கமாக நிறுத்தியவன் “இங்க எல்லோரும் கேட்கிறாங்கள்ல பதில் சொல்லு. நீயும் நானும் காதலித்ததையும் தாண்டி கணவன் மனைவியாக வாழ்ந்தோம் என்பது வரைக்கும் சொல்லவா? இல்ல நம்ம இரண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் வக்கீல் மூலமா என்பதை சொல்லனுமா? இல்ல நீ இதையெல்லாம் மறச்சு என்கிட்ட எதுவும் சொல்லாமல் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணிக்க இங்க வந்திருக்கியே அதையும் சேர்த்து சொல்லவா? என்றவன் தனது கையில் இருந்தப் பதிவுத் திருமணம் சான்றிதழை அருணின் முன்பு நீட்டினான்.
அருண் வாங்குவதற்கு முன்பாக மோகன் அதை வாங்கிப் பார்த்துவிட்டு அது உண்மை என்று தெரிந்ததும் நித்ராவை ஓங்கி அறைந்தான்.
மித்ராதான் ஓடிவந்து “என்னத்தான் பண்றீங்க? அவளை அடிக்காதிங்க” என்று தடுத்தாள்.
எவ்வளவு திண்ணக்கம் பாரு இவளுக்கு .காதலிச்சதும் இல்லாமல் இண்டுபேரும் ஒண்ணா வாழ்ந்திருக்காங்க.எதையுமே சொல்லாம நம்மக்கிட்ட இருந்து மறைச்சிருக்கா.
அதுக்கூட பரவாயில்லை அவளுக்காக மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் ஆனவரைக்கும் வந்தும் அமைதியாக இருந்துட்டாளே.
இப்போ ஆயுஷ் வந்து தாலி கட்டுனதுனால இந்த பிரச்சனை நமக்கு தெரிய வந்தது இல்லன்னா கல்யாணத்துக்கு அப்புறம் அந்த மாப்பிள்ளை இவளுக்கு தாலி கட்டுனதுக்கு அப்புறம் எல்லா பிரச்சினையும் வெளியே வந்திருந்தால் என்னவாயிருக்கும்?
அவளுடை வாழ்க்கை போச்சு அந்த மாப்பிள்ளையோட வாழ்க்கையும் ஆயுஷோட வாழ்க்கையும் போச்சுன்னு ஆகிருக்கும்.
இது எதுவும் தெரியாது நம்மதான் எல்லாருடைய வாழ்க்கையிலும் விளையாடிருப்போம்.உன் தங்கச்சி ஏன் இப்படி செய்தான்னு கேளு?” என்று மித்ராவையும் சேர்த்து திட்டினான்.
ஆனால் நித்ராவோ யார் கேட்டதுக்கும் பதில் சொல்லாது அமைதியாக நின்றவளின் கண்கள் மட்டும் பதிலாக கண்ணீரை உதிர்த்துக்கொண்டிருந்தது.
ஆயுஷிற்கோ அவளைப் பார்த்துக் கொஞ்சம் கோபம் கொஞ்சம் பரிதாபமும் என்று எல்லாமே சேர்ந்து கலவையாக வந்தது ஆனாலும்.
அவள் தனக்கு துரோகம் செய்ய நினைத்திருக்கிறாள் என்பதை மட்டும் அவனால் மன்னிக்கவே முடியாது போனது.
ஆயுஷ் தன்னைத்தானே நிதானப்படுத்திக்கொண்டு மெதுவாக”நான் இவளை உண்மையாகக் காதலிச்சேன்.அவள் அப்படியில்லை.ஆனாலும் என் காதலுக்காக என் வாழ்க்கைக்காக நான் அவள் கழுத்தில் தாலிக்கட்டிட்டேன். ஊரறிய மனைவியாக்கிக் கொண்டேன்.அவளை என்னோடு அழைச்சிட்டுப் போறேன்”என்றான்.
அதைக்கேட்டதும் ஆயுஷின் கையைப்பிடித்துக்கொண்டவள் ”நீங்க என்னை அடிங்கக் கொல்லுங்க. உங்களை ஏமாத்திட்டேன்னு என்னை இப்பவே வேணும்னாலும் கொன்னுப்போடுங்க. ஆனால் நீங்க என்னோடு வாழணும்னு நினைக்காதிங்க ஆயுஷ்.என்னால் எதையுமே உங்கக்கிட்ட இப்போ சொல்லமுடியாது. தயவு செய்து இங்கிருந்துப் போயிடுங்க. உங்களுக்குன்னு உங்கக் குடும்பத்தாளுங்க நல்ல பொண்ணாகப் பார்த்து வச்சிருக்காங்க அவளையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழனும் உங்க சந்தோஷம் எனக்கு முக்கியம் ஆயுஷ்”என்று அவனிடம் கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சினாள்.
அதைப்பார்த்துச் சிரித்த ஆயுஷ் “இதென்ன அடுத்த நாடகமா? சூப்பர் சூப்பர்.நல்ல ட்ராமா போடுற,நடிக்கிற.ரொம்பப் பெரிய ஆள்தான்போல நீ?அப்படியெல்லாம் என்னை ஏமாத்திட்டு நீ சந்தோஷமா வாழனும்னு நினைக்காத.உன் கழுத்துல தாலி கட்டினது என் கூட வாழ கூட்டிட்டு போறதுக்குத்தான். நான் உன்னை உண்மையா காதலிச்சேன் உன்னை தவிர வேற ஒருத்தியை ஏறெடுத்துக்கூட பார்க்கமாட்டேன் .உனக்கு சத்தியம் பண்ணிருக்கேன் ஞாபகம் இருக்கா. நான் இந்த வாழ்க்கையில சாகுற வரைக்கும் உன் கூடமட்டும் தான் வாழ்வேன்.எனக்கு வேறு யாரும் தேவையில்லை நீ மட்டும் எனக்கு போதும்” என்று பிடிவாதம் பிடித்தான்.
“ஐயோ ஆயுஷ் உங்களுக்கு எதுவுமே தெரியாது நான் சொன்னாலும் இப்போதைக்கு அதை பொய்ன்னுதான் சொல்லுவீங்க.
அதை நிரூபிக்க என்கிட்ட எந்த ஆதாரமும் கிடையாது தயவுசெய்து நீங்க டெல்லிக்கு போயிடுங்க. நான் இருக்கேனா செத்தேனான்னுக்கூட பார்க்க வராதீங்க. நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.நீங்கக்கட்டின இந்தத்தாலி என் கழுத்துல நான் சாகுற வரைக்கும் கிடக்கும்.தயவு செய்து உங்கக்கூட மட்டும் என்னைக் கூட்டிட்டுப்போகாதிங்க ஆயுஷ்.நீங்க சந்தோசமா வாழணும்னு நான் நினைக்கிறேன்.நீங்க என்னை எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கங்க”என்று கைக்கூப்பி அழுதாள்,
அப்போதும் ஆயுஷுக்கு அவள் தன்னை வெறுத்து ஒதுக்குகிறாள் தன்னை வேண்டாம் என்று சொல்வதற்காக இப்படி எல்லாம் டிராமா போடுகிறாள்,நடிக்கிறாள் என்று தீர்க்கமாக நம்பினான் அவள் சொன்ன எதையுமே காதிலயே வாங்கிக் கொள்ளவில்லை.
“இங்கப்பாரு இப்போ நீ என்கூட வர்ற.அப்படி வரலைன்னா மொத்தக் குடும்பத்தையும் ஏமாத்திட்டாங்கன்னு கேஸ் குடுத்து உள்ளத் தள்ளிடுவேன். இல்லைன்னா வேறமாதிரி செய்வேன்.எனக்கு உன்கூடமட்டும்தான் வாழணும். உன்னை உயிராக நேசிச்சதுக்கு தண்டனையாக நான் இதை ஏத்துக்கிறேன்”என்று பிடிவாதமாக நின்றிருந்தான்.
அவளோ நீங்க போலீசுக்கு போய் கேஸ்கொடுத்தால் நானும் கேஸ் கொடுப்பேன். என்னை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு போய் சொல்லுவேன். உங்களைவிட்டுப் பிரியறதுக்கு என்னென்ன வழி உண்டுமோ எல்லா வழியையும் நானும் செய்வேன். ஆனால் உங்கக்கூட மட்டும் நான் வரமாட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க “என்று அவளும் பிடிவாதம் பிடித்தாள்.
அதைக் கேட்டதும் ஆயுஷுக்கு வந்த கோபத்தில் அவளை அடிக்க கையை ஓங்கினான்.
ஆனால் மோகன் அவனது கையைப் பிடித்து தடுத்து “ஆயுஷ்”அவள் சட்டப்படி உங்க மனைவி.அவளை நீங்கக்கூட்டிட்டுப் போகலாம் . நாங்க இதுல எந்தத் தடையும் சொல்லமாட்டோம். உங்க விருப்பப்படி அவளைக் கூட்டிட்டுப்போங்க”என்றுவிட்டான்.
“அத்தான் ஏன் இப்படி பேசுறீங்கத்தான். எனக்குத்தான் விருப்பம் இல்லன்னு சொல்லுறானே.அப்புறம் ஏன் எல்லாரும் என்ன தள்ளி விடுவதில் குறியா இருக்காங்க. நான் போய் எங்கேயாவது விழுந்து செத்துருவேன்”என்று கதறினாள்.
நீ எதுக்கு இப்போ சாகப் போற உன்னை மாதிரி ஒரு பொம்பள பிள்ளைய பெத்து வளர்த்ததுக்காக நான் தான் ஆத்துலயோ குளத்துல விழுந்து சாகணும்.நீ ஒன்னு பண்ணு பேசாமல் எங்க எல்லாரையும் கொன்னுட்டு நீ சந்தோஷமா தனியா வாழு. இப்படி உன்னை காதலிச்ச மனுசன ஏமாற்றுவதற்கு உனக்கு எப்படி மனசு வந்தது? நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட” என்று தனம் அவளை அடித்தார்.
மித்ராவுக்கு இதில் விருப்பமில்லை என்பதால் மோகனிடம் தனியாகப் பேசினாள்.
அத்தான்.. நித்ராவுக்கு இதுல விருப்பம் இல்லையே. ஏன் நீங்க இதை பேசி சமாதானம் பண்ணி பிரிச்சு வைக்க கூடாது.
ஆயுஷ்கூட எதுக்கு நம்ம நித்ராவை அனுப்பணும்.இங்கே ஏதோ பிரச்சனை இருக்கு
நித்ரா இவ்வளவு பிடிவாதமாக வேண்டாம் என்று சொல்லுறான்னா ஏதோ இருக்குல்லத்தான்”என்று மித்ரா தனது தங்கைக்காக பேசினாள்.
இல்லடி ஆயுஷைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஆயுஷ் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வரமாட்டான் அவன் இவ்ளோ தூரம் இறங்கி வந்து தாலி கட்டியிருக்கான்னா கண்டிப்பா அவன் ரொம்ப நேசித்திருக்கான். எங்கேயோ ஏதோ தப்பா நடந்திருக்கு. உன் தங்கச்சி சில விஷயங்களை சொல்ல மாட்டேங்கிறா.இவங்க இரண்டு பேரும் வாழும் போது தான் ஒன்னு அவங்களுக்குள்ள மொத்தமா பிரிவு வரணும். இல்லையா மொத்தமா சேர்ந்து வாழணும். ஏன்னா ஆயுஷ் எல்லார் முன்னாடியும் தாலி கட்டிட்டியிருக்கான். இதற்கு ஒரு முடிவு அவங்களால மட்டும்தான் எடுக்கமுடியும்.அந்த முடிவை அவங்க எடுக்கறதுக்கு நம்ம கொஞ்சம் அவகாசம் கொடுப்போம். அதற்குள் சேர்ந்து வாழணும் நான் நினைக்கிறேன்.நீ கொஞ்சம் அமைதியா இரு” என்று மோகன் பெரிய மனுஷனாக முடிவு எடுத்திருந்தான்.
இப்போது மோகன் அருணிடமும் ருக்குமணியுடனும் பேசி நித்ராவை ஆயுஷோடு டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
நித்ராவோ பயந்து பயந்து ஆயுஷின் கைப்பிடிக்குள் இருந்தாள்.
அவள் மட்டுமல்ல அவளது வாழ்க்கையும் அவளது இருதயமும் இப்போது ஆயுஷின் இறுகியப் பிடிக்குள்தான் இருக்கின்றது!
பாவம் நித்ரா மூச்சுக்காக ஏங்கித் தவிக்கும் கரையில் விழுந்த மீனாகத் துடித்துக் கொண்டிருக்கிறாள்!
அவளைக் காப்பாற்றக்கூடியவனே அவளது மூச்சினை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறானே! பேதையவள் என் செய்வாள்?